என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சைதாப்பேட்டையில் எம்.சி. ராஜா கல்லூரி விடுதி கட்டிடத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
- மாணவர் விடுதி 44 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
- மாணவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
அண்ணல் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளான இன்று சென்னை சைதாப்பேட்டையில் எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அங்குள்ள மாணவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். 484 மாணவர்கள் தங்கும் வகையில் பல்வேறு வசதிகளுடன் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
Next Story






