என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்ட பலர் பத்ம விருது பெற்றுள்ளனர்.
- பத்ம விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகளை 139 பேருக்கு மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் கலைஞர் செப் தாமு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பத்ம விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட பத்ம விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கும், பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஆர்.ஜி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி.விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தத்தமது துறைகளில் தாங்கள் மென்மேலும் உயரங்களை அடையவேண்டும், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.






