என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டெல்லியில் வாங்கிய பளார் அறையை மறைக்க அண்ணாமலை எதையாவது பேசுவார் - சேகர்பாபு
    X

    டெல்லியில் வாங்கிய 'பளார் அறை'யை மறைக்க அண்ணாமலை எதையாவது பேசுவார் - சேகர்பாபு

    • குறைகள் கூட குற்றச்சாட்டுகளாக மாறும்போது தான் நாங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
    • குறைகளையும் சரிசெய்ய இந்த அரசு தயாராக உள்ளது.

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

    அண்ணாமலை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

    டெல்லி சென்றார். அங்கு பளார்... பளார்ன்னு அறை விட்டு அனுப்பி இருக்கிறார்கள்.

    இங்கே வந்த பிறகு அதை மறைக்க ஏதாவது பேசிதானே ஆகணும்.

    வரச்சொல்லுங்கள். ஏதாவது ஆதிதிராவிடர் விடுதிகளில் உணவு தரம் இல்லையென்றால் அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு ஆய்வுக்கு செல்லலாம்.

    அப்படி இருந்தால் நிச்சயமாக வருத்தம் தெரிவித்துக்கொண்டு அடுத்தடுத்து அந்த குறைகளையும் சரிசெய்ய இந்த அரசு தயாராக உள்ளது.

    குறைகளே சொல்லக்கூடாது என்பது அல்ல. குறைகள் கூட குற்றச்சாட்டுகளாக மாறும்போது தான் நாங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

    ஆகவே அவர் கூறிய அந்த கருத்தை ஏற்றுக்கொண்டு உடனடியாக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படுகின்ற எங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வோம். அப்படி ஏதாவது இருந்தால் அந்த குறைகள் தீர்க்கப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×