என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கிறிஸ்துமஸ் அன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி மெட்ரோ ரெயில் இயக்கப்படும்
- பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
- இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சென்னை:
கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு மெட்ரோ ரெயில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக மெட்ரோ ரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.
மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியில் அடிப்படையில் இயங்கும்.
அதன்படி, பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Next Story






