என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டிட்வா புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- சென்னையிலும் அதிகமாக மழை பெய்வதற்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.
- அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மீட்பு குழுக்களை அனுப்பி உள்ளோம்.
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க அவர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:
* சென்னையிலும் அதிகமாக மழை பெய்வதற்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.
* டிட்வா புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து நடவடிக்கைளும் எடுத்துள்ளோம்.
* கடந்த கனமழையின்போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
* அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மீட்பு குழுக்களை அனுப்பி உள்ளோம்.
* தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்காக முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. உணவுப்பொருட்களும் கையிருப்பில் உள்ளது.
* டெல்டா மாவட்ட மக்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வஞ்சிக்காமல் இருந்தால் சரி. அவர் எப்போதும் அப்படி தான் சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






