என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது பயணங்களில் துணையாகட்டும்..! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
    X

    சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது பயணங்களில் துணையாகட்டும்..! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    • சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை திறந்து வைத்தார்.
    • சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது (வாழ்க்கைப்) பயணங்களில் துணையாகட்டும் என எக்ஸ் பக்கத்தில் பதிவு.

    வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புத்தக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் "இனி, Chennai Central, Metro Rail நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் உறவுகளும் நட்புகளும், அன்பை பரிமாறிக்கொள்வதைப் போல், புத்தகங்களைக் கொண்டு அறிவைப் பரிமாறிக்கொள்ளச் சென்னை புத்தகப் பூங்கா-வைத் தொடங்கியுள்ளோம்!

    சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது (வாழ்க்கைப்) பயணங்களில் துணையாகட்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×