என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கார் கதவை திறந்தபோது விபரீதம்.. கதவில் மோதி கீழே விழுந்த நபர் மீது மற்றொரு கார் ஏறி இறங்கியதால் உயிரிழப்பு
- சைக்கிளில் சென்றவர் கார் கதவில் மோதி கீழே விழுந்துள்ளார்.
- பின்னாடியில் இருந்து வந்த மற்றொரு கார் கீழே விழுந்த நபர் மீது ஏறி இறங்கியுள்ளது.
சென்னை அண்ணா நகரில் கார் கதவை திறந்தபோது ஏற்பட்ட விபத்தில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த நபர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
Indirect Taxes and Customs என்ற பெயர் பலகையோடு வந்த காரின் கதவை திடீரென திறந்தபோது, சைக்கிளில் சென்றவர் கார் கதவில் மோதி கீழே விழுந்துள்ளார்.
அப்போது பின்னாடியில் இருந்து வந்த மற்றொரு கார் கீழே விழுந்த நபர் மீது ஏறி இறங்கியுள்ளது.
இதில், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணா நகர் போலீசார் உடலை கைப்பற்றினர்.
பின்னர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






