என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரின் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- மகேந்திரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- மூர்த்தி 2ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில், அவரது மகன்கள் ஒரு மாதத்திற்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்தனர்.
- கொலை செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் சிறந்த அதிகாரி.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் குடும்பத்தினரை திருப்பூர் புறகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி.மகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் மகேந்திரன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்த மூர்த்தி, அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோரிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சரிபார்த்த பிறகே வேலையில் சேர்த்தேன். மூர்த்தி 2ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில், அவரது மகன்கள் ஒரு மாதத்திற்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்தனர். கொலை செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் சிறந்த அதிகாரி.
அவர் கொலை செய்யப்பட்டது எல்லோருக்கும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.






