LPG Shortage | ஆட்டோகளுக்கான LPG தட்டுப்பாடு - ஓட்டுநர்கள் வேதனை

சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.எல்பிஜி நிரப்பும் மையங்களில் போதிய ஸ்டாக் இன்றி தட்டுப்பாடு
LPG Shortage | ஆட்டோகளுக்கான LPG தட்டுப்பாடு -  ஓட்டுநர்கள் வேதனை
Published on

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள பல்வேறு வணிக ரீதியான எல்பிஜி நிரப்பும் மையங்களில் போதிய ஸ்டாக் இன்றி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல மையங்கள் மூடப்பட்டுள்ளன

எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக ஆட்டோக்கள் ஓட்ட முடியாத சூழல் உருவாகியுள்ளது என்று ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எல்பிஜி கிடைக்கும் ஒரு சில மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுநர்கள் ஆட்டோக்களுக்கு எல்பிஜி நிரப்பி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com