என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு - வடமேற்காக நகரக்கூடும்.
- காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்யும்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு - வடமேற்காக நகரக்கூடும் என்றும், வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடலோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்பு உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






