என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    INTUC சார்பில்  நடைபெற்ற வாகன பிரச்சார பயணத்தை குமரி எம்பி விஜய்வசந்த் துவக்கி வைத்தார்
    X

    INTUC சார்பில் நடைபெற்ற வாகன பிரச்சார பயணத்தை குமரி எம்பி விஜய்வசந்த் துவக்கி வைத்தார்

    • தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடி கொண்டிருக்கும் ஐஎன்டியூசி நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.
    • மத்தியில் ஆளும் அரசு தொடர்ந்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.

    குமரி மேற்கு மாவட்ட INTUC சார்பில் 3-வது நாளாக தக்கலை தாலுகா அலுவலகம் அருகே இருந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வரை நடைபெற்ற வாகன பிரச்சார பயணத்தை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடி கொண்டிருக்கும் ஐஎன்டியூசி நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள், மத்தியில் ஆளும் அரசு தொடர்ந்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் திட்டங்களை கொண்டு வருகிறார்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டியது அவர்களின் கடமை ஆகும், உங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உங்களுக்கு துணையாக இருப்பேன், பாராளுமன்றத்தில் பேசியும் நிறைவேற்றி தர முயற்சி எடுக்கப்படும் என பேசினார்.

    பத்மநாபபுரம் தொகுதி ஐஎன்டியூசி துணைத்தலைவர் சி. எல். ராபர்ட் தலைமையில் நடைபெற்ற வாகன பிரச்சார பயணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், ஆரோக்கியராஜன், பத்மநாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார், வட்டார தலைவர் பிரேம்குமார், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண்கிறிஸ்டோபர், தக்கலை ஐஎன்டியூசி நகர தலைவர் செய்யது அலி, வட்டார தலைவர் ஜெகன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் லைலா, மூத்த காங்கிரஸ் தலைவர் பி.டி. எஸ் மணி, தங்கநாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோரிக்கைகள்

    1. குமரி மாவட்டத்தில் E.S.I மருத்துவமனை கட்ட தேவையான இடம் ஒதுக்கீடு செய்து, E.S.I பதிவு பெற்ற தொழிலாளர்களின் நலன் காத்திட மாநில அரசை வலியுறுத்தியும்..

    2 I.N.T.U.C தொழிற்சங்க பிரிதிநிதித்துவ தொழிலாளர்கள் மற்றும் மத சிறுபான்மை தொழிலாளர்கள் ஆகியோரது மனுக்களை முறையாக பரிசீலிக்காமல் அரசின் பணபயன்கள் தொழிலாளர்களுக்கு கிடைக்காமலும் அரசிற்கு கெட்டபெயர் ஏற்படுத்தி வரும் குமரி கிழக்கு மாவட்ட தொழிலாளர் நல ஆணையர் இல. இராஜகுமார் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்தியும்....

    3. தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக திருத்தியதை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும்...

    4. விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும்...

    5. மத்திய மாநில அரசுகளின் வரி பயங்கரவாதத்தை கண்டித்தும்...

    6. ஜல் ஜீவன், அம்ருத் குடிநீர் திட்டங்களால் சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் விரைந்து செப்பனிட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும்..

    7. P.F. -ஐ காரணங்காட்டி நலவாரிய சலுகைகளை மறுக்கும் நலவாரிய அதிகாரிகளை கண்டித்தும் சரியான வழிமுறைகளை வகுத்திட மாநில அரசை வலியுறுத்தியும்.

    8. அரசு ரப்பர் கழக தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடவும்பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடவும், பென்ஷன் தொகையை மாதம் ரூபாய் 10000 /- மாக உயர்த்திட, ரப்பர் வாரியத்தை வலியுறுத்தியும்

    9. உடலுழைப்பு தொழிலாளிகளுக்கு வழங்கி வரும் பென்ஷன் தொகையை மாதம் ரூ.3000 மாத உயர்த்த கோரியும்

    ஆகிய கோரிக்கைகள்

    Next Story
    ×