என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூரில் நடந்தது என்ன: வேலுசாமிபுரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது எதனால்? - அரசு தரப்பு விளக்கம்
    X

    கரூரில் நடந்தது என்ன: வேலுசாமிபுரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது எதனால்? - அரசு தரப்பு விளக்கம்

    • விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
    • தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது.

    கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    கரூர் தவெக தேர்தல் பரப்புரையில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    சதி நடந்திருப்பதாக தவெக தரப்பு கூறி வரும் நிலையில் விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தரப்பில் வீடியோ வெளியிடப்பட்டது.

    இந்த சந்திப்பில் பேசிய தமிழ்நாடு ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், "தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது. இரண்டாவதாக உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். வேலுசாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது அதனை தவெகவினர் ஏற்றுக் கொண்டனர்.

    10,000 பேர் வருவார்கள் என த.வெ.க. தரப்பில் கடிதம் எழுதியிருந்தார்கள். முந்தைய கூட்டங்களை வைத்து 20,000 பேர் வருவார்கள் எனக் கணித்து அதற்கேற்ப காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுவாக 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே நடைமுறை, ஆனால் கரூரில் 20 பேருக்கு ஒரு காவலர் போடப்பட்டது.

    "விஜய் பரப்புரை வாகனம் கூட்டத்திற்குள் வர முடியாத அளவுக்கு இருந்தால், போலீசார் கூட்டத்தை விலக்கினர். ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல வேண்டாம் என டி.எஸ்.பி. எச்சரித்தும் அவர்கள் அதனை ஏற்கவில்லை.

    ஜெனரேட்டரை சுற்றியுள்ள தகடுகளை தவெகவினர் பிரித்துச் சென்றதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது, தவெக துண்டு அணிந்தவர்தான் மின்சார ஜெனரேட்டரை ஆஃப் செய்தனர்.

    கரூர் கூட்டத்திற்கு கட்சியினர் 5 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்திருந்தனர். விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன. சிலர் மயக்கம் அடைந்த தகவல் அறிந்து கூட்டத்திற்குள் முதலில் வந்தது த.வெ.க. ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ்தான். சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×