என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் - பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த டி.எஸ்.பி.யிடம் சி.பி.ஐ. விசாரணை
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் குடும்பத்தினர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- விஜய் வருகையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த கரூர் டி.எஸ்.பி. செல்வராஜ் சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜர் ஆனார்.
கரூர்:
கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, இணைச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் குடும்பத்தினர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விஜய் வருகையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த கரூர் டி.எஸ்.பி. செல்வராஜ் சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜர் ஆனார். அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






