என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல... உழவர் திருநாள் வாழ்த்துகள்- கமல்ஹாசன்
- மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லை.
- உழவர்களுக்கு ஒன்றென்றால் அவர்களுக்கு உடன் நிற்பதும்தான் நம் நன்றியைக் காட்டும் வழிகள்.
சென்னை:
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தத் தேசத்துக்கு விடுதலை கிடைத்த போது மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லை. 'பஞ்சப் பராரிகளின் நாடு' என இழிவு செய்யப்பட்ட நாம் பசியை வென்றதற்கு ஒரே காரணம் நமது விவசாயிகள்.
'நாட்டுப்புறத்தான்' தன் காட்டுக்குச் செல்வதால்தான் நம் வீட்டுக்குள் பசி இல்லை என்பதை உணர்வதும்; உழவர்களுக்கு ஒன்றென்றால் அவர்களுக்கு உடன் நிற்பதும்தான் நம் நன்றியைக் காட்டும் வழிகள்.
உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல. உழவர் திருநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
Next Story






