என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
    X

    கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு

    • கவிதை - கவிஞர் சுகுமாரன், நாவலாசிரியர் - முருகன், உரைநடை ஆசிரியர் - பாரதிபுத்திரனுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மொழி பெயர்ப்பாளர் - கீதா, நாடகப் பிரிவில் கருணா பிரசாத் 2026-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    2026-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளை பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அறிவித்துள்ளார்.

    கவிதை - கவிஞர் நா.சுகுமாரன், சிறுகதை - ஆதவன் தீட்சண்யா, நாவல் - இரா. முருகன், உரைநடை - பேராசிரியர் பாரதிபுத்திரன் (சா.பாலுசாமி), நாடகம் - கருணா பிரசாத், மொழி பெயர்ப்பு - வ. கீதா , நாடகப் 2026-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் புத்தக கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதாளர்கள் விவரக்குறிப்பு

    நா. சுகுமாரன்

    கவிதை, நாவல், மொழிபெயர்ப்புகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பாடுபொருளிலும், வடிவத்திலும் தனித்துவமிக்கக் கவிஞர். கவிஞர் பாப்லோ நெரூதாவின் பாதிப்புடன் உலகத் தரமான கவிதைகளைப் படைத்த படைப்பாளர்.

    கோடைகாலக் குறிப்புகள், பூமியை வாசிக்கும் சிறுமி, சுகுமாரன் கவிதை (1954-2019) இன்னொரு முறை சந்திக்க வரும்போது ஆகியவை சிறந்த தொகுப்புகள். குங்குமம் இதழில் பணி புரிந்துள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தீவிர இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    ஆதவன் தீட்சண்யா

    நான் ஒரு மது விரோதி, லிபரல் பாளையத்துக் கதைகள், ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் முதலியவை இவரது சிறந்த சிறுகதைகள். சமூகநீதி சார்ந்து சிறந்த கதைகளை மாறுபட்ட மொழிநடையில் எழுதிய படைப்பாளர். 21ஆம் நூற்றாண்டில் இதுவரை எவரும் கையாளாத மொழிநடையில் கதைகளை எழுதியது இவருடைய சிறப்பு. மேலும் இவர் தமிழ்நாடு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

    இரா.முருகன்

    அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே. இரா. முருகன் குறுநாவல்கள் போன்ற நாவல்களைப் படைத்தவர். இதுவரை 29 நூல்களை எழுதியுள்ளார். மாய யதார்த்தக் கதைகளையும் (Magical Realism) எழுதிய வித்தியாசமான எழுத்தாளர். ஆங்கிலத்திலும் இவர் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×