என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சொல்வது முற்றிலும் தவறானது - உள்துறை செயலாளர் தீரஜ் குமார்
    X

    'குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சொல்வது முற்றிலும் தவறானது' - உள்துறை செயலாளர் தீரஜ் குமார்

    • அரசியலுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
    • மக்கள் நிர்வாகத்தின் மீது, குறிப்பாகக் காவல்துறை மீது அதிக நம்பிக்கை கொண்டு புகார்களைப் பதிவு செய்கின்றனர்.

    சென்னையில் இன்று தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

    "குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகச் சொல்வது முற்றிலும் தவறானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான குற்றங்களின் எண்ணிக்கை எவ்வாறு குறைந்துள்ளது என்பதற்கான புள்ளிவிவரங்களை நான் ஏற்கனவே வழங்கியுள்ளேன். அதுவே ஒட்டுமொத்தச் சூழல் கணிசமாக முன்னேறியுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தும். மக்கள் நிர்வாகத்தின் மீது, குறிப்பாகக் காவல்துறை மீது அதிக நம்பிக்கை கொண்டு புகார்களைப் பதிவு செய்கின்றனர்.

    காவல்துறை மரணங்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு துளியும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளது. எப்போதாவது அரிதாக துரதிர்ஷ்டவசமான இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தால், தமிழ்நாடு அரசு அதுகுறித்து நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதையும், சம்பந்தப்பட்ட குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதையும் உறுதி செய்யும். அஜித் குமார் கொலை வழக்கில் அரசின் நிலைப்பாடு என்ன? மற்றும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்பதை அனைவரும் அறிவார்கள் சிபிசிஐடி அவ்வழக்கை நன்றாக விசாரிக்கும் என்றாலும், சம்மந்தப்பட்டவர்கள் போலீசார் என்பதால், வெளிப்படைத்தன்மை காரணமாக சிபிஐக்கு வழக்கை அரசு மாற்றியது. என தெரிவித்தார்.

    தொடர்ந்து எப்போதும் சட்டம், ஒழுங்கு தொடர்பான விமர்சனங்களுக்கு எப்போதும் அமைச்சர்கள்தான் செய்தியாளர்களை சந்திப்பார்கள். அவர்கள்தான் குற்றங்களின் எண்ணிக்கையை கடந்த ஆட்சியோடு ஒப்பிட்டு பேசுவார்கள். ஆனால் நீங்கள் ஏன் இப்போது செய்தியாளர்களை சந்திக்கிறீர்கள், அதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு,

    சட்டம் ஒழுங்கு சூழல் தொடர்பாக உண்மைக்கு மாறாக சில மாதங்களாக செய்திகள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கவே இன்று செய்தியாளர்களை சந்திக்கிறோம். 2021ல் 1597 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2025ல் இது 1461 ஆக குறைந்துள்ளன. படிப்படியாக குறைகின்றன. மற்றொன்று அரசியலுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் எந்த ஆண்டை குறிப்பிட்டு சொன்னேன் என்று நீங்கள் கவனித்தால் இதில் அரசியல் உள்ளதா என்பது உங்களுக்கு புரியும் எனவும் தெரிவித்தார்.

    Next Story
    ×