என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
- ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருவாகி இன்று மதியம் மாமல்லபுரம்- காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் உள்ள ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Live Updates
- 29 Nov 2024 11:18 AM IST
வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- 29 Nov 2024 10:46 AM IST
சென்னையில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. பகலிலேயே இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் செல்கின்றனர்.
















