என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நான் 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
    X

    நான் 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

    • டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.
    • செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்துப் பேசினார்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து குரலெழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

    இதைதொடர்ந்து, செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார்.

    பின்னர், டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, டெல்லிக்குச் சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செங்கோட்டையன் அமைதி காத்து வந்தார்.

    இந்தநிலையில், கோபி செட்டிபாளையத்தில் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில்,"அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை. ஊடகங்கள்தான் அதனை தவறாக புரிந்து கொண்டது. 10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், ஒன்றரை மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் தெரிவித்தேன்.

    பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.

    Next Story
    ×