என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொடர் கனமழை எதிரொலி- கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
    X

    தொடர் கனமழை எதிரொலி- கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    • தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கியது.

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கடும் வெயில் நிலவி வந்தது. அதே சமயத்தில் அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. அந்த வகையில் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என்றே கூறலாம். இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. மேலும் கனமழை பெய்யாததால் கரையோர பயிர்களான வாழை, அன்னாசி, தென்னை போன்றவை ஒரு சில இடங்களில் வாடிய நிலையில் காணப்பட்டன.

    இந்தநிலையில் தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

    இந்த மழை நேற்று அதிகாலை முதல் பலத்த மழையாக பெய்தது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்வரத்து பகுதி மற்றும் களியல், திற்பரப்பு, குலசேகரம், பாலமோர், சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் கனமழை நீடித்தது. மதியம் முதல் கனமழையாக வெளுத்து வாங்கிய நிலையில் விடிய விடிய நீடித்தது.

    இந்நிலையில் கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×