என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிறுமி உயிரிழப்பு எதிரொலி- தனியார் பள்ளி முன் போலீசார் குவிப்பு
- சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வெளி ஆட்கள் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனியார் பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளி ஆட்கள் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் உள்ளது. 4 காவல் துறை வாகனங்களும் பள்ளியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமி லியா லட்சுமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






