என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செஞ்சி பகுதிகளில் ஏரிகளில் உடைப்பு - சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
- சங்கராபரணி ஆற்றில் செல்லும் நீர் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
- செஞ்சி பகுதியிலுள்ள ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் 2,411 கன அடி நீர் சங்கராபரணி ஆற்றில் நிமிடத்திற்கு செல்கிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் வெள்ள நீர் சூழ்ந்து ஆர்ப்பரித்து செல்கின்றன.
சங்கராபரணி ஆற்றில் செல்லும் வெள்ள நீரால் நெடிமோழியனூரில் உள்ள கலிங்கல் பகுதியில் ஆற்றின் நடுவே செல்லும் நீர் அருவி போல் கொட்டி செல்வதால் திண்டிவனம், விக்கிரவாண்டியை சேர்ந்த மக்கள் அந்த பகுதிகளுக்கு சென்று குளித்தும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
செஞ்சியில் உருவாகும் இந்த ஆறானது வீடுர் வழியாக சென்று புதுச்சேரியில் கடலில் கலக்கின்றன. செஞ்சி பகுதியிலுள்ள ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் 2,411 கன அடி நீர் சங்கராபரணி ஆற்றில் நிமிடத்திற்கு செல்கிறது.
சங்கராபரணி ஆற்றில் செல்லும் நீர் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதே போன்று தென்பெண்ணை ஆற்றில் செல்லும் வெள்ள நீரால் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு பகுதியில் இருகரைகளையும் சூழ்ந்து ஆர்பரித்து செல்லும் வெள்ள நீரை காண பொதுமக்கள் வந்து அணைக்கட்டு மேல் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.






