என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விறுவிறுப்பு- 48 பேரை பதம் பார்த்த காளைகள்!
- ஜல்லிக்கட்டு போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகளாக நடைபெறுகிறது.
- படுகாயம் அடைந்த 19 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பு.
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்போட்டியை, இன்று காலை சுமார் 7:00 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
சுமார் 1,100 காளைகளும், ஏறத்தாழ 600 மாடுபிடி வீரர்களும் இப்போட்டியில் களமிறங்கி உள்ளனர். போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகளாக நடைபெறுகிறது.
இந்நிலையில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காவலர்கள், வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 48 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதில், வீரர்கள் 17 பேர், காளை உரிமையாளர்கள் 12 பேர், பார்வையாளர்கள் 15 பேர், காவலர்கள், தீயணைப்பு வீரர் என 4 பேர் காயமடைந்துள்ளனர்.
காளை முட்டியதில் படுகாயம் அடைந்த 19 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.






