என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்காகவே சுற்றுப்பயணம் - எடப்பாடி பழனிசாமி
    X

    தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்காகவே சுற்றுப்பயணம் - எடப்பாடி பழனிசாமி

    • 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளேன்.
    • என்னை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு ஸ்டாலின் அவரை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்.

    அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளேன்.

    * தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்காகவே இந்த சுற்றுப்பயணம்.

    * எனது பிரசார பயணத்தின் நோக்கம் தி.மு.க. ஆட்சியின் கொடுமைகளை மக்களிடம் எடுத்துக்கூறுவதுதான்.

    * மக்களோடு எப்போதும் பேசி கொண்டிருப்பவன் நான்.

    * எப்போதும் மக்களை சந்திப்பதால் தான் மக்களின் குரலாக அ.தி.மு.க.வும் நானும் ஒலித்து வருகிறோம்.

    * பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு நன்மை செய்தது அ.தி.மு.க.

    * என்னை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு ஸ்டாலின் அவரை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்.

    * சுற்றுப்பயணத்தில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    * தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    * மேட்டுப்பாளையத்தில் பிரசார பயணத்தை தொடங்கும் நான் 234 தொகுதிக்கும் நேரடியாக சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.

    * கடந்த 50 மாத ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பட்ட கொடுமைகளை எடுத்து சொல்லி கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவதே பிரசாரத்தின் நோக்கம்.

    * விடியா ஆட்சியின் குறைகளை மக்களிடம் எடுத்துரைத்து தமிழ்நாட்டில் மாற்றம் கொண்டு வருவதே நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×