என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வடசென்னை அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
    X

    வடசென்னை அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

    • கழகத்தினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
    • வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் எழும்பூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் புரசை எம்.கிருஷ்ணன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்திற்கு களங்கமும் அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் லண்டன் வெங்கடேஷ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி முன்னாள் செயலாளர் விசு (எ) விசுவாசி துறைமுகம் கிழக்கு பகுதி இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏ.ஏ.கலையரசு ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

    கழகத்தினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.

    எழும்பூர் மேற்கு பகுதி கழக செயலாளர் ஏ.சம்பத் குமார், பகுதி மகளிர் அணி செயலாளர் எம்.இளவரசி, பகுதி மாணவர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் புரசை கிருஷ்ணன் ஆகியோர் இன்று முதல் அவரவர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

    வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் எழும்பூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் புரசை எம்.கிருஷ்ணன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×