என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சாத்தனூர் அணை திறப்பு விவகாரம்- அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
- சாத்தனூர் அணை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.
- அரசின் துரித நடவடிக்கைகளால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை:
சாத்தனூர் அணை நிலை குறித்து உண்மைக்கு புறம்பான தகவல் பரப்பப்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
சாத்தனூர் அணை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. முன்னறிவிப்பின்றி 1.68 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதாக கூறுவது பொய். அரசின் துரித நடவடிக்கைகளால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சிலர் மனசாட்சியைத் துறந்துவிட்டு புரட்டுகளை பரப்பி வருகின்றனர்.
நீர் வரத்தை முன்கூட்டியே கணித்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
Next Story






