என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையின் பொற்காலமாக இருக்கிறது- முதலமைச்சர் பேச்சு
- போட்டிகளை நடத்துவதில் தமிழகம் உயர்தரமாக உள்ளது.
- விளையாட்டுகளை வளர்க்க, திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்குவிக்க முதலமைச்சர் கோப்பை.
2025ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. 5 பிரிவுகளில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார். பின்னர் பேசும்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையின் பொற்காலமாக திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. தேசிய போட்டியாக இருந்தாலும், சர்வதேச தொடராக இருந்தாலும் போட்டிகளை நடத்துவதில் தமிழகம் உயர்தரமாக உள்ளது.
தமிழக வீரர்கள் வெற்றிமேல் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணமாக பயிற்சியாளர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்ததுகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
விளையாட்டுகளை வளர்க்க, திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்குவிக்க, உரிய அங்கீகாரம் வழங்க 37 கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன் இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்தியிருக்கிறோம்.






