என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு
- 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கோவிலில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் கடந்த 2023-ம் ஆண்டு பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பட்டியலின மக்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, சுமார் 22 மாதங்களுக்கு பிறகு திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
எஸ்.பி. சரவணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.






