என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வாட் BRO, ஓவர் BRO, அடக்கி வாசிங்க BRO - விஜய்க்கு எதிராக தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர்
    X

    மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

    'வாட் BRO, ஓவர் BRO, அடக்கி வாசிங்க BRO' - விஜய்க்கு எதிராக தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர்

    • அ.தி.மு.க. நிலைப்பாடு பற்றியும், அக்கட்சி தொண்டர்கள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
    • மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை பாரபத்தியில் த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21-ந்தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. சுமார் 5 லட்சத்திற்கும் மேல் திரண்ட தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். மோடி தலைமையிலான மத்திய அரசையும், 'அங்கிள்' என்று கூறி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

    அதேபோல் அ.தி.மு.க. நிலைப்பாடு பற்றியும், அக்கட்சி தொண்டர்கள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். த.வெ.க. மாநாட்டில் விஜய்யின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

    விஜய்க்கு எதிராக பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இன்று மதுரை நகர் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் ஆங்கிலத்தில் வாட் புரோ, ஓவர் புரோ, அடக்கி வாசிங்க புரோ என்ற வசனங்கள் உள்ளவாறு மதுரை முழுவதும் காணப்படுகிறது.

    விஜய் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் தி.மு.க.வினர் தொடர்ச்சியாக ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×