என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல், காந்திகிராமத்தில் நாளை மின்தடை
- திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- சிறுமலை பழையூர், அகஸ்தியார்புரம், தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது
திண்டுக்கல்:
திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காபட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
காந்திகிராமம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காந்திகிராம பல்கலைக்கழகம், செட்டியபட்டி, கல்லுப்பட்டி, பூத்தாம்பட்டி, சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, அமலிநகர், முருகன்பட்டி, இந்திராபுரம், பெருமாள் கோவில்பட்டி வேளாங்கன்னிபுரம், சின்னாளப்பட்டி, கிழக்கோட்டை, பூஞ்சோலை, மேட்டுப்பட்டி, அம்பாத்துரை, கலைமகள் காலனி, திருநகர், சிறுமலை பழையூர், அகஸ்தியார்புரம், தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






