என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- 4 மணி நேரம் காத்திருந்த சாமி தரிசனம்
- வருகிற ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு நாள்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
கோவிலில் ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாகப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வருகிற ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது கோடை விடுமுறை என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாளான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் கார், வேன், மற்றும் பஸ்களில் குடும்பத்துடன் வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.






