என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இன்று மாலையே உருவாகிறது மோன்தா புயல்
- நாளை மறுநாள் மாலை அல்லது இரவு மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
- புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்தம் நாளை புயலாக வலுப்பெறும் என அறிவித்திருந்த நிலையில் இன்று மாலையே புயலாக வலுப்பெறும் என்றும் ஆழ்ந்த காற்றழுத்தம் புயலாக மாறி வடக்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் காலைக்குள் தீவிரப்புயலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் மாலை அல்லது இரவு மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






