என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த (தீவிர) காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றால் அடுத்த இரண்டு தினங்களில் தமிழகத்தை நோக்கி நகரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Live Updates
- 27 Nov 2024 10:07 AM IST
ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 27 Nov 2024 10:06 AM IST
திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல், சேந்தமங்கலம், நீடாமங்கலம், மன்னார்குடியில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
- 27 Nov 2024 10:03 AM IST
திருத்துறைப்பூண்டி அருகே கனமழையால் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. மரம் சாய்ந்து விழுந்ததால் மின் கம்பிகளும் அறுந்து சாலையில் விழுந்தன.
மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்தபோது நூலிழையில் பெண் ஒருவர் உயிர் தப்பினார்.
- 27 Nov 2024 9:58 AM IST
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் கனமழை பெய்து வருகிறது. காலை முதலே கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- 27 Nov 2024 9:56 AM IST
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
வயல்களில் வெள்ளம் தேங்கி உள்ளதால் விவசாயிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
- 27 Nov 2024 9:25 AM IST
திருத்துறைப்பூண்டியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.
- 27 Nov 2024 9:24 AM IST
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியிலும், பூம்புகார் துறைமுகத்திலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
- 27 Nov 2024 9:22 AM IST
கடலூரில் கனமழை பெய்து வரும் நிலையில் மீட்பு உபகரணங்களுடன் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.














