என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
Over Hype கொடுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - ஃபெங்கல் புயலாக மாறியது
- நாகப்பட்டினத்திற்கு கிழக்கே, புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
- சென்னைக்கு தென்கிழக்கே 340 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலைக்கொண்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது.
3 நாட்களாக கணிப்புகளை பொய்யாக்கிய ஃபெங்கல் புயல் ஒருவழியாக வங்கக்கடலில் உருவானது.
ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது, மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், சென்னையில் இருந்து காரைக்கால் வரை அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், நாளை மதியம் அல்லது இரவு வரை தொடர்ச்சியான அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.