அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! - மு.க.ஸ்டாலின்

இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்!நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது திராவிட மாடல் அரசும் செயல்படுகிறது.
அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை :

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்!

"கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபத்தைப்போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள்" எனச் சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர்.

'தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்' எனும் அவரது கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாய்க் கொண்டு நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது திராவிட மாடல் அரசும் செயல்படுகிறது.

அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! எனக் கூறியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com