என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
    • அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். மேலும், அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார்.

    இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன்.

    மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்! என்று பதிவிட்டுள்ளார்.



    Next Story
    ×