என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஐ.நா.விருது பெற்ற சுப்ரியா சாகு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    ஐ.நா.விருது பெற்ற சுப்ரியா சாகு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • சுப்ரியா சாகு அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
    • அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது!

    காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக ஐ.நா.சுற்றுச்சூழல் அமைப்பின் #ChampionsOfTheEarth விருதினை வென்றுள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் & வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு அவர்களுக்கு எனது பாராட்டுகள்!

    ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், Plastic பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.



    Next Story
    ×