என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை புத்தக பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
- 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் இந்த புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புத்தக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகங்களை பார்வையிட்டார்.
10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் இந்த புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
Next Story






