கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: தலைமை செயலகத்தில் முதல்வர் அவசர ஆலோசனை

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: தலைமை செயலகத்தில் முதல்வர் அவசர ஆலோசனை
Published on

சென்னை:

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com