என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    6 அரசு துறைகளின் அமைச்சர்கள்- அதிகாரிகளுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
    X

    6 அரசு துறைகளின் அமைச்சர்கள்- அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    • ஒவ்வொரு துறை வாரியாக தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
    • ஒவ்வொரு துறைகளிலும் இதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகள் எவ்வளவு? எத்தனை பணிகள் செயல்பாட்டில் உள்ளன?

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அவ்வப்போது அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், ஆய்வு மேற்கொள்கிறார்.

    அது தவிர சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எத்தனை செயலாக்கத்திற்கு வந்திருக்கிறது. அதில் எத்தனை திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்பது போன்றும் ஒவ்வொரு துறை வாரியாக தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் இன்று சட்டத்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை நிதித்துறை உள்ளிட்ட 6 அரசு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் ஒவ்வொரு துறைகளிலும் இதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகள் எவ்வளவு? எத்தனை பணிகள் செயல்பாட்டில் உள்ளன? நிலுவையில் உள்ள பணிகள் எவ்வளவு? கைவிடப்பட்ட பணிகள் ஏதும் உள்ளதா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×