என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விரைவில் தமிழ் பெயர்களுக்கான இணையப்பக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள் என தெரிவித்து இருந்தார்.
- தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே! என்று நிதன் சிற்றரசு என்பவர் எக்ஸ் தளத்தில் கேட்டு இருந்தார்.
சென்னை:
அண்ணா அறிவாலயத்தில் மயிலை வேலு இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள் என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே! என்று நிதன் சிற்றரசு என்பவர் எக்ஸ் தளத்தில் கேட்டு இருந்தார்.
இந்த நிலையில், தம்பி நிதின் சிற்றரசு கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.






