என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
    X

    கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

    • துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை.
    • புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல்.

    துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற இருக்கிறது. நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்துள்ளது. இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

    தமிழகத்தில் மொத்தம் 55 எம்.பி.க்கள் (மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் சேர்த்து) உள்ளன. இதில் பெரும்பாலமான எம்.பி.க்.கள் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள். துணை ஜனாதிபதி தேர்தலில் திமுக கூட்டணியின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுவதாக அமையும்.

    இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சரும் ஆன மு.க. ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சி தலைவர்களுடன் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×