என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கட்டணமில்லா குடிநீர் வழங்கும் இயந்திரங்களின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
- ஒரு லிட்டர் மற்றும் 150 மில்லி குவளை அளவுகளில் நீரினை பெற்றுக்கொள்ளலாம்.
- முதல் கட்டமாக 50 இடங்களில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் சேவை மெரினாவில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது. ஒரு லிட்டர் மற்றும் 150 மில்லி குவளை அளவுகளில் நீரினை பெற்றுக்கொள்ளலாம். தொட்டியில் தண்ணீர் தீர்ந்து போனால், குடிநீர் வாரியத்துக்கு IOT தொழில்நுட்பம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாகத் தண்ணீர் நிரப்பப்படும்.
முதல் கட்டமாக 50 இடங்களில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, அடையாறு, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது.






