என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் நியமனம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் நியமனம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    • ஜி.முத்து இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
    • திருப்போரூர் பேரூராட்சிக் கழகம் பேரூராட்சி செயலாளராக கே.சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் கே. சிவ ராமன், மாவட்ட மருத்துவ அணித் தலைவர் பொறுப்பில் இருக்கும் கே. பிரிதிவிராஜன். திருப்போரூர் பேரூராட்சி கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி.முத்து இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

    செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும், திருப்போரூர் பேரூராட்சிக் கழகச் செயலாளர்களாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க் காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

    செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் மாவட்ட துணைச் செயலாளராக ஜி.முத்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவராக கே. துரைமுருகன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்டச் செயலாளராக பி.ஏ.யாசர் அராபத், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மருத்துவ அணிக்கு மாவட்டத் தலைவராக டி.ராகுல், மாவட்டச் செயலாளராக டாக்டர் கே.பிரிதிவிராஜன், திருப்போரூர் பேரூராட்சிக் கழகம் பேரூராட்சி செயலாளராக கே.சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×