என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதுக்கோட்டை அருகே கார்கள் - சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
    X

    புதுக்கோட்டை அருகே கார்கள் - சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

    • மோதிய வேகத்தில் கார் அருகில் வந்த மற்றொரு கார் மீது மோதியது.
    • விபத்து பற்றிய தகவல் அறிந்த நமணசமுத்திர போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை:

    காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். இவர் தனது மனைவி அருணா, மகள் ரம்யா, ரம்யாவின் மகள்கள் மகிழினி, கமிழினி ஆகி யோருடன் காரில் இன்று காலை காரைக்குடிக்கு வந்து கொண்டிருந்தார்.

    கார் புதுக்கோட்டை அருகே உள்ள நமண சமுத்திரம் காவல் நிலையம் அருகே புதுக்கோட்டை-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே வந்த சரக்கு வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் கார் அருகில் வந்த மற்றொரு கார் மீது மோதியது.

    இதில் 2 கார்கள், சரக்கு வாகனம் அம்பளம் போல் நொறுங்கியது. இதில் ஒரு காரில் வந்த தம்பதியினர் செந்தமிழ் செல்வன், அருணா சரக்கு வாகன கிளீனர் இலுப்பூரை சேர்ந்த சுதாகர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தனர். 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

    விபத்து பற்றிய தகவல் அறிந்த நமணசமுத்திர போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இறந்தவர்கள் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த கோர விபத்து நமணசமுத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×