என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் 9 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    சென்னையில் 9 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    • வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
    • தூதரகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கட்சித் தலைமை அலுவலகம் என முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னையில் உள்ள சிங்கப்பூர், கொரியன், சுவீடன், ஆஸ்திரேலியன், ரஷ்யா உள்ளிட்ட 9 வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தூதரகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×