என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தைப்பூச நாளில் திருத்தணி மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல தடை
    X

    தைப்பூச நாளில் திருத்தணி மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல தடை

    • நாளை மறுநாள் (1-ந்தேதி) தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.
    • பக்தர்கள் வசதிக்காக இலவச பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படுகிறது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் திருத்தணி கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.

    இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள், சுவாமி தரிசனம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், மலர் காவடி, மயில் காவடி சுமந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமியை வழிபட உள்ளனர். மேலும் சண்முக கடவுளுக்கு காவடி மண்டபத்தில் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    தைப்பூச நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருத்தணிக்கு வருவார்கள் என்பதால் மலைக் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதையடுத்து வாகன நெரிசலை தடுக்கும் வகையில் தைப்பூசத்தன்று ஆட்டோக்கள் மற்றும் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மலைக்கு சென்று வர அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக இலவச பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×