என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செயின் திருட்டில் கைது: ஊராட்சி மன்றத் தலைவி பாரதி திமுக-வில் இருந்து  நீக்கம்
    X

    செயின் திருட்டில் கைது: ஊராட்சி மன்றத் தலைவி பாரதி திமுக-வில் இருந்து நீக்கம்

    • செயின் திருட்டில் ஈடுபட்டபோது கைது.
    • தொடர்ந்து 15 வருடமாக செயின் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி வாக்குமூலம்.

    திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி, பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம், நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் திரும்பியபோது, அவரின் 5 சவரன் செயினை மர்ம பெண் ஒருவர் திருடியுள்ளார். இது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, பாரதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், கடந்த 15 ஆண்டுகளாகச் செயின் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், திருடிய நகையை விற்று கிடைக்கும் பணத்தில் சொந்த ஊரில் வணிக வளாகம் கட்டி வருவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மேலும், திமுக ஊராட்சி மன்ற தலைவியாக ஆன பின்னரும் திருட்டு பழக்கத்தை விட சொல்லி உறவினர்கள் அறிவுறுத்தியும், தன்னால் திருட்டை விட முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் திமுக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    Next Story
    ×