என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்
    X

    நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்

    • நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள்.
    • இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    சேலம்:

    நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில்,

    நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் ஆகிய நான் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறோம். இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    Next Story
    ×