என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'2026-ல் எடப்பாடி தலைமையில் என்.டி.ஏ. ஆட்சி' - மதுவந்தி பேச்சு!
- பிரதமர் மோடி மட்டும்தான் மீனவர்களுக்காக குரல்கொடுத்து வருகிறார்.
- ரூ.3000 வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை மட்டும் மாற்றி போடுங்கள்.
திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக அறிவுசார் பிரிவு மாநில செயலாளர் மதுவந்தி,
"'கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே' என்பது பகவத்கீதை சொல்வது. பகவத்கீதை நடைபெறும் இதிகாசம் மகாபாரதம். மகாபாரதத்தை எழுதியவரே ஒரு மீனவக்குளத்தை சேர்ந்தவர்தான்.
தமிழ்நாட்டில் ஏப்ரலுக்கு பின் நல்லது நடக்கும். எல்லையில் எத்தனை மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்களுக்காக யார் குரல்கொடுத்தது? பிரதமர் மோடி மட்டும்தான் குரல் கொடுத்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மட்டும்தான் மீனவர்களை காப்பாற்றி இங்கு கொண்டுவருகிறார். மற்றவர்கள் யாருக்கும் எந்த கவலையும் இல்லை.
மீனாட்சி மதுரையை ஆண்டார். ஜெயலலிதா தமிழ்நாட்டை ஆண்டார். நான் அதிமுக இல்லை. ஆனால் அவரது குடும்பத்தை சேர்ந்தவர். அதிமுகவில் இல்லையென்றாலும், என்டிஏ கூட்டணியில்தான் உள்ளேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்தக் கூட்டணியை எதுவும் செய்யமுடியாது. தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி வேண்டும் என்று மீனவர்கள் நீங்கள் நினைத்தால், நடக்கும்.
மீனவர் சமுதாயம் மீன்பிடிக்கும் சமுதாயம் இல்லை. கடலில் முத்தெடுக்கும் சமுதாயம். எடப்பாடியார் தலைமையில், அதிமுக தலைமையில் என்டிஏ ஆட்சி வரும்போது இன்னும் நிறைய செய்வோம். திருவள்ளூர் மட்டுமில்லை, சுத்துப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் எல்லா நன்மைகளும் நடக்கும்.
ரூ.3000 வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை மட்டும் மாற்றி போடுங்கள். அது உங்கள் பணம். அதனால் பணத்தை வாங்கிக்கொண்டு, எந்தக் கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டுமோ அதற்கு ஓட்டுப் போடுங்கள். கண்டிப்பாக ஒரு நல்லாட்சி வரும். திருப்பரங்குன்றம் முருகன் எப்படி டயரை வெடிக்க வைத்தரோ, அதுபோல எல்லாமும் வெடித்து தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி, எடப்பாடியார் ஆட்சி வரும்." என தெரிவித்தார்.
வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தாலும் இருதரப்பிலிருந்து வைக்கப்படும் கருத்துகள் வேவ்வேறாகவே இருந்துவருகின்றன. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் அது அதிமுக தலைமையிலேயே நடைபெறும் என்றும், அதிமுக ஆட்சி அமைத்தாலும் அது என்டிஏ ஆட்சிதான் எனவும் ஒரு போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் இபிஎஸ் தலைமையில் என்டிஏ ஆட்சி என மதுவந்தி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.






