என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அம்பேத்கர் பிறந்தநாளை ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் - அரசுக்கு விஜய் கோரிக்கை
    X

    அம்பேத்கர் பிறந்தநாளை ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் - அரசுக்கு விஜய் கோரிக்கை

    • சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
    • நூல் வெளியீட்டு விழாவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "ஒரு வேளை திரு. அம்பேத்கர் இன்று உயிருடன் நம்முடன் இருந்தால் அவர் என்ன நினைப்பார். இன்றைய நம் இந்தியாவை நினைத்து அவர் வெட்கப்படுவாரா, பெருமைப்படுவாரா. ஒருவேளை வருத்தப்பட்டால் எதை நினைத்து வருத்தப்படுவார். இன்று நம் நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டுமெனில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும்."

    "அதற்கான பொறுப்பு, கடமை நம் அனைவரிடமும் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த பொறுப்போடும், கடமையோடும் தான் இதை கூறிக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் ஆனி வேர் சுதந்திரமான, நியாயமான தேர்தல். தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் தான் நடக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நம் ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டும் என்று தோன்றியது."

    "அது அமைய தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில் மட்டும் தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதே என் வலிமையான கோரிக்கை. ஏப்ரல் 14, அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள். அன்று தான் நம் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் உரிமைகள் பிறந்த தினம். இதனால் அந்த தேதியை இந்தியர்களின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள். இதை இந்திய ஒன்றிய அரசிடம் நான் முன்வைக்கிறேன்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×